திருப்பூர்: ஜனநாயகமாதர் சங்கம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்

84பார்த்தது
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். 28ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல உள்ளனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

 பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு நடத்த வேண்டும். காவல்துறையின் செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். தமிழக குழந்தைகள் ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி