திருப்பூர்: எஸ்டிபிஐ கட்சியினர் நகல் எரிப்பு போராட்டம்..

72பார்த்தது
மத்தியில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய சமூகத்தின் வக்ஃபு சொத்துக்களை திருடுவதற்கான சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நேற்று (பிப்.13) தாக்கல் செய்துள்ளது. இதை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி நேற்று காலை முதலே நாடு முழுவதும் வக்ஃபு சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்திவருகிறது, இதன் ஒரு பகுதியாக திருப்பூர் எஸ்டிபிஐ கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் வி. கே. என். பாபு அவர்கள் தலைமையில் சிடிசி கார்னரில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் உடனடியாக இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி