திருப்பூர்: பள்ளி குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

74பார்த்தது
திருப்பூர்: பள்ளி குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அனுப்பர்பாளையம் புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று (பிப்.20) நடைபெற்றது. 

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் வெங்கடேஷ் கலந்துகொண்டு கூறுகையில், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எவை எனவும், தங்கள் மீதான பாலியல் பிரச்சினைகளை தைரியமாக தங்கள் பெற்றோரிடமும், நம்பிக்கைக்குரிய நபர்களிடமும் தெரிவிக்க வேண்டும். தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச ஆலோசனை எண் 15100 பயன்பாட்டுகளை குறித்தும், போக்சோ சட்டத்தில் உள்ள கூறுகளை பற்றியும் விரிவாக கூறினார். வக்கீல் பூர்ணாபிரியா செல்போனில் உள்ள சாதக பாதகங்களை பற்றி கூறினார். 

மரியாதையா பெண்கள் மற்றும் குழந்தைகளை உடல் நலம் குறித்தும் கல்வியின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி