திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி அறக்கட்டளை சார்பில் சுமார் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையமானது கட்டப்பட்டு வருகிறது. திருப்பூரில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருவதால் அவர்களுக்கும் இந்த புற்றுநோய் சிகிச்சை மையம் பயனுள்ளதாக இருக்கும். இந்த மயமானது அதிநவீன வசதிகளுடன் செயல்பட உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், மன நிம்மதிக்காகவும், புற்று நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தற்பொழுது புற்றுநோய் புத்துணர்வு மையம் கட்டப்படவுள்ளது இதில், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், கவுன்சிலிங் அறை, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதனை செய்தி துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கௌரவத் தலைவர் சக்திவேல் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்ட படர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் புற்றுநோய் மருத்துவமனை கட்டிடத்திற்காக, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஒரு கோடி ரூபாய் காசோலை வழங்கினார்.