இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) 11ஆவது சீசன் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஷில்லாங்கில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என பெங்களூரு முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதியிலும் பெங்களூரு அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது.