உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை மற்றும் உள்ளாட்சி துறையினர் பள்ளி அருகில் உள்ள பெட்டி கடைகள், டாஸ்மாக் பார் மற்றும் டாஸ்மாக்கை சுற்றியுள்ள பகுதிகளில் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கடந்த 2 வாரங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 48 கடைகளுக்கு ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 48 உணவு விற்பனை கடைகளில் 38 பேர் மீது முதல்முறை குற்றத்திற்காகவும், 8 உணவு வணிகர்கள் மீது 2-ம் முறை குற்றத்திற்காகவும், மீதமுள்ள 2 உணவு வணிகர்கள் மீது 3-ம் முறை குற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை ஒழிக்கும் பொருட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும், 2-ம் முறை குற்றத்திற்காக ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் மற்றும் 3-ம் முறை குற்றத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து 90 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக 9444042322 என்ற வாட்சப் எண்ணிலோ அல்லது YN food safety consumer APP என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.