ஸ்டிக்கர்களை ஒட்டி பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.

53பார்த்தது
தைப்பூச திருவிழா 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆறுபடை வீடுகளுக்கும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில் திருப்பூரிலிருந்து பழனி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அழகுமலை, சிவன்மலை, கைத்தமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் திரளாக செல்லத்துவங்கி உள்ளனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் சாலை ஓரம் நடக்கும் பொழுது சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து உள்ளிட்ட ஆபத்துக்கள் நிகழாத வகையில் முன்னேற்பாடாக பக்தர்களின் பை உடை உள்ளிட்ட உடைமைகளிலும் தூக்கிச்செல்லும் காவடியிலும் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் புஷ்பா பேருந்து நிறுத்தம், குமரன் சாலை ஆகிய பகுதிகளிலும் தெற்கு போக்குவரத்துக் காவல்துறையினர் சார்பில்
திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி, கோவில் வழி பேருந்து நிலையம், நல்லூர், பேருந்து நிறுத்தம் என பல்வேறு இடங்களில் முகாமிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வெள்ளை நிறம் கொண்ட ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். இதன் மூலம் பக்தர்கள் பாதயாத்திரை செல்வதை வாகன ஓட்டிகள் அறிந்து கவனமாக செல்வதுடன் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி