சேலம் நகரம் - Salem City

சேலம்: திருமணமான பெண்ணுடன் காதல்.. பரபரப்பு

சேலம்: திருமணமான பெண்ணுடன் காதல்.. பரபரப்பு

சேலம் இரும்பாலை அருகே உள்ள கணவாய் காடு காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி, வெள்ளி பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் பிரகாஷ் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் கணவர் பிரகாஷின் தந்தையிடம் இது குறித்து நேற்று முன்தினம்(அக்.19) கூறினார். இதனையடுத்து அம்மாசி மகனை கண்டித்துள்ளார். பின்னர் இரவில் தூங்கச் சென்ற பிரகாஷ் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். சம்பவம் குறித்து அறிந்த இரும்பாலை போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా