சேலத்தில் விஜயதசமியை ஒட்டி குழந்தைகளின் கற்பனைத் திறனை வெளிக் கொணரும் வகையில் நடைபெற்ற ஓவிய போட்டியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.
விஜயதசமியை ஒட்டி சேலத்தில் பிரபல தனியார் உணவகம் சார்பில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. குழந்தைகளின் கற்பனை திறனை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். எல். கே. ஜி முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட இந்த ஓவிய போட்டியில் கார்ட்டூன், இயற்கை, இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவர்கள் தங்களது கற்பனை திறனை ஓவியமாக வரைந்து வெளிப்படுத்தினர்.
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தால் குழந்தைகள் செல்போன், டிவி ஆகியவற்றில் மூழ்கியுள்ள சூலில், குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை மேம்படுத்தவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.