ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. தொல்குடி, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், CM Arise ஆகிய திட்டங்களில் பயன்பெற ஆதார் கட்டாயம். நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையும், CM Arise திட்டத்தில் தொழில் தொடங்க 35% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது.