சேலத்தில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை

60பார்த்தது
சேலத்தில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மதியம் திடீரென கரு மேகங்கள் கூடியது. சுமார் 2மணி அளவில் திடீரென பலத்த இடியுடன் மழைபெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மிக பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சேலம் டவுன், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், ஐந்து ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி