சேலத்தில் பரோட்டா மாஸ்டர் தற்கொலை
சேலம் சின்னத்திருப்பதி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 29). பரோட்டா மாஸ்டர். இவர், கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. நேற்று(செப்.24) காலை வீட்டில் இருந்த வசந்தகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.