சேலத்தில் கடந்த சில நாட்களாக இரவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. இரவு 11 மணிக்கு லேசான பெய்ய தொடங்கிய மழை. சிறிது நேரத்தில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவு வரை இந்த மழை நீடித்தது. இதனால் அரசு ஆஸ்பத்திரி ரோடு, பிரட்ஸ் ரோடு, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.