சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

82பார்த்தது
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 23-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்றார். தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி தலைமை தாங்கி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் 2 பேருக்கு முதுமுனைவர் பட்டமும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ, மாணவி களுக்கு தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களை கவர்னர் ஆர். என். ரவி வழங்கினார். விழாவில் மொத்தம் 397 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 46 ஆயிரத்து 365 மாணவர்களுக்கும், பல்கலைக்கழக துறைகளில் படித்த 1, 018 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி நிறுவனத்தில் படித்த 1, 077 பேருக்கும் என மொத்தம் 48 ஆயிரத்து 460 மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி