சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நேற்று ஜெயலலிதா பேரவையின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் வந்தனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி. மு. க. அரசை கண்டித்து நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது குறித்து பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் வெற்றிலை மாலை அணிவித்தும், வெள்ளிவாள் வழங்கியும் வாழ்த்து பெற்றனர்.