துணை முதல்வர் உதயநிதி ஸ்டலின் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்றது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா துணை முதல்வர் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 1, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து , கால்பந்து, கைப்பந்து,
வலை பயிற்சி நெட்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகள் என மொத்தம் 707 ஊராட்சியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயன் அடைந்துள்ளனர்.
மேலும் சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 3, 583 பயனாளிகளுக்கு ரூ. 33. 26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.