சேலம் போலீஸ் கமிஷனரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு

56பார்த்தது
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு, அதிமுக சேலம் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் இன்று வந்தனர். அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் சரவணன் தலைமையில் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தனர். பின்னர் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர்
சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் அவதூறாகவும், அநாகரிகமாகவும் இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம்
இரண்டரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் பொதுச்செயலாளர் மீது கால்ப்புணர்ச்சியோடு பேசியுள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் சரவணன் பேட்டியளித்தார். இந்த மனு தரும் நிகழ்ச்சியில் திரளான அதிமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி