திருச்சி உறையூர் புதுவெள்ளாளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி நிர்மலா (வயது 54). இவர் கடந்த 20ஆம் தேதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 2 அரை கிராம் தங்க மோதிரம், மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் (வயது 25) என்பவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இரண்டு கிராம் தங்கம் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.