தொட்டியம் அருகே பாலியல் வழக்கில் கைதான மூவர் மீது குண்டாஸ்

79பார்த்தது
தொட்டியம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வயல் பகுதியில் கடந்த 10. 5. 2024-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமியை கெளத்தரச நல்லூர்பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (70), மதன்குமார் (19), மதன் (30) ஆகியோர்களில் சின்னத்தம்பியும், மதன்குமாரும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனை மதன் செல்போனில் படம் எடுத்து மற்றவர்களிடம் காண்பித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 28. 1. 2025 அன்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தபுகாரின் பேரில் போக்சோ சட்டம் உட்பட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் அத்துமீறிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சின்னதம்பி, மதன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி