திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மண்பறை கிராமத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
துறையூரில் இருந்து சிறுகாம்பூர் செல்லும் சாலையில் உள்ளது மண்பறை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தெப்பக்குளம் ஆனது பருவ காலங்களில் மழை பெய்யும் தருவாயில் நீர் நிரம்பி காணப்படும். இந்த தெப்பக்குளத்தின் ஓரமாக சாலை அமைந்துள்ளதால் எதிர்பாராத நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வாகனங்கள் குலத்திற்குள் விழுந்த விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. சிறுகாம்பூர் மூவானூர் சித்தாம்பூர் ஆகிய கிராமங்களில் இருந்து துறையூருக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்ற. எனவே தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும் தருவாயில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெப்பக்குளத்தை ஒட்டி தடுப்புச் சுவர் கட்டி தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.