நடக்கும் போது தான் மூட்டுகளின் உட்பகுதி துாண்டப்பட்டு, திரவத்தைத் சுரக்கச் செய்யும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளை செய்யும் போது தான் தசைகள் வலிமை அடையும். இதுவரை நடைப்பயிற்சியே செய்ததில்லை என்றால், எடுத்த உடனேயே மணிக்கணக்கில் நடப்பது நல்லது கிடையாது. இது மூட்டுகளில் வலியை ஏற்படுத்திவிடும். தினசரி நடைப்பயிற்சி செய்வது தான் மூட்டுகளுக்கு நல்லது, அடிக்கடி இதற்கு பிரேக் விடக்கூடாது.