துறையூர்: தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

59பார்த்தது
துறையூர் அடுத்த பெருமாள் மலை அடிவாரத்தில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பெருமாள் மலை அடிவாரம் கலைஞர் திடலில் துறையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வைத்து பேசினார். துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவசரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார். துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், முன்னாள் துணைவேந்தர், கழக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் , முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். இறுதியாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன், மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், ஆதிதிராவிட நலக்குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், நகர துணைச் செயலாளர் இளங்கோவன், பிரபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டப்பா, பூபதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி