அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சவுக்கு சங்கர் அவர்களின் இல்லத்தில் அரங்கேறியிருக்கும் திட்டமிட்ட வன்முறை அநாகரீகத்தின் உச்சம் - புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது" என தெரிவித்துள்ளார்.