துறையூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பேச்சுப்போட்டி

67பார்த்தது
திருச்சி வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்ட பேச்சு போட்டி துறையூர் சரியான தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஏராளமான பள்ளி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் எழில்மாறன் தலைமை தாங்கினார். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர்கள் அண்ணாத்துரை வீரபத்திரன் சரவணன் நகர சேர்மன் செல்வரராணி மலர் மன்னன் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேராசிரியர்கள் அழகுதுரை வேலுச்சாமி முதுகலை தமிழாசிரியர் அகிலா நடுவராக கலந்து கொண்டு முதல் இரண்டாவது மூன்றாவது இட பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தனர். அத்தோடு பத்து ஆறுதல் பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தனர். விழா முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டது. பேச்சு போட்டி யில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடு திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் துணைத்தலைவர் செல்வராஜ் மாவட்ட அமைப்பாளர் லெனின் ஆகியோர் செய்து இருந்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி