திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வைரிசெட்டிபாளையம் கிராமத்தில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணியை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருணாநேரு குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.