பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கையில் படப்பிடிப்பில் பங்கேற்க வந்த கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிவகங்கையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கங்கை அமரன் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து தற்போதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை.