பும்ரா 2-வது இன்னிங்ஸில் பந்துவீசாதது குறித்து ஆஸ்திரேலியா தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர், "பும்ராவால் கடைசி நேரத்தில் பந்துவீச முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஆனாலும், எங்களுக்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இன்று அந்த விக்கெட்டில் அவரை எதிர்கொண்டிருந்தால் எங்களுக்கு கடுமையான நாளாக இருந்திருக்கும். அவரை களத்தில் பார்க்காதபோது தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்ததாக நினைத்தோம்" என்று கூறியுள்ளார்.