திருச்சி மாவட்டம் துறையூர் சர்பிடி நகரில் பொன்மலர் என்ற பெண்ணிடம் கடந்த ஐந்தாம் தேதி அன்று இரண்டு மர்ம நபர்கள் 11 சவரன் தங்க நகை பறித்து சென்றனர் இது தொடர்பான புகாரின் பேரில் இரண்டு நாட்களில் காணாமல் போன செயினை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்த துறையூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்களுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இச்சங்கத்தின் தலைவர் சத்யம் சரவணன் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் நிகழ்வில் பேசிய துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனியாக இருக்கும் பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை அணியக்கூடாது எனவும் எங்கு பணி புரிந்தாலும் அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் எனவும் அப்போதுதான் குற்றவாளியை உடனடியாக பிடிக்க ஏதுவாக இருக்கும் என பேசினார்.