திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் இன்று (ஜன.5) கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மது விற்பனையை அம்பலப்படுத்திய பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார். சாராய வியாபாரிகளுக்கு அரணாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக காவல் துறை திமுகவின் பிரிவுபோல் இல்லாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.