உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை நடுரோட்டில் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் அதுவும் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் தனது காதலியை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே அந்த இளைஞரை இழுத்துச் சென்று அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினர்.