சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இலங்கை வீரர் தீக்ஷனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தீக்ஷனா பட்டியலில் முன்னேறியுள்ளார். இதனால், முதல் இடத்தில் இருந்த ரஷித் கான் 2ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளார். நமீபியா வீரர் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 3ஆவது இடத்தில் தொடருகிறார்.