இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ-யை விவகாரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சாஹல் தனது இன்ஸ்டா பக்கத்தில், "நான் கணக்கில் வைக்க முடியாத அளவுக்கு பலமுறை கடவுள் என்னை பாதுகாத்துள்ளார். இதனால் நான் எத்தனை முறை காப்பாற்றப்பட்டேன் என்று எனக்கே தெரியாததை தான் நினைத்துப் பார்க்க வேண்டும். எனக்கே தெரியாத அளவுக்கு என்னுடன் இருந்ததற்கு கடவுளுக்கு மிக்க நன்றி. ஆமென்!" என குறிப்பிட்டுள்ளார்.