மருத்துவ குணம் கொண்ட “மைக்ரோகிரீன்” வளர்ப்பு முறை!!

64பார்த்தது
மருத்துவ குணம் கொண்ட “மைக்ரோகிரீன்” வளர்ப்பு முறை!!
நம்முடைய பொன்னான நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு வீட்டிலேயே குறைந்த செலவில் அதிக மருத்துவ குணம்கொண்ட "மைக்ரோகிரீன்” என்னும் "பேபி” கீரையை மிக எளிமையான முறையில் வீட்டில் வளரப்பது பற்றிய இலவச ஆலோசனைகளை விளக்கத்தை கோவில்பட்டி, மேளாள் வேளாண் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் கூறியுள்ளதாவது.

பொதுவாக கீரைகள் நமது அன்றாட உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. இலைக் காய்கறி வகையை சேர்ந்தது. இவற்றின் இலைகளும், தண்டுகளும் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளன. மேலும் கீரைகளில் புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. நமது அன்றாட உணவில் குறைந்தபட்சம் 100 கிராம் பச்சை இலைக் காய்கறிகளை உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் கீரை வகைகளின் தேவையும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி