தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியது. செரிமானத்தை வலுப்படுத்துவது முதல், இதய ஆரோக்கியம் வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இந்த தனியா நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும். இதனால் உடல் எடை படிப்படியாக குறைகிறது. இது நச்சுக்களை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.