தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை தவிர்த்து, அதை புரிந்து படிக்க வேண்டியது அவசியமாகும். தொடக்கம் முதலே விரைவாக படிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம். மனநிலையை நிலைப்படுத்தி, அமைதியான சூழலில் நிதானமாக படித்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.