கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாண்டு படித்து வந்த மாணவரின் சடலம் சடையம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் கிடந்துள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.