

தூத்துக்குடி விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக பிஜேபி மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பதவி ஏற்று முதல் முறையாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட பிஜேபி சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமான பிஜேபி கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் கார் மூலம் நெல்லை புறப்பட்டு சென்றார்.