சாத்தான்குளத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

80பார்த்தது
சாத்தான்குளத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
கால்நடை வளர்க்க விரும்பும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கறவைமாடுகள் வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பன்னம்பாறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கூட்டுறவுத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 97 பயனாளிகளுக்கு ரூ. 53, 11, 553 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், வழங்கினார்

தொடர்புடைய செய்தி