திருவைகுண்டம் - Srivaikuntam

தூத்துக்குடி: கொல்கத்தா வந்தேபாரத் ரயில்.. மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை

தூத்துக்குடி: கொல்கத்தா வந்தேபாரத் ரயில்.. மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை

தூத்துக்குடியில் இருந்து கொல்கத்தா வரை வந்தேபாரத் ஸ்லீப்பர் இரயிலை இயக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகனிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக பாரதிய ஜனதாகட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில், "தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டமானது வணிகம் மற்றும் உற்பத்தியில் சிறந்து விளங்கி வரும் வேலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் தொழில் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன்சுற்று வட்டாரத்தைச் சார்ந்த ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் போன்ற பல்வேறு தரப்பு மக்கள் தொழில் மற்றும் வணிகம் காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்குச் சென்று வருகின்றனர். இவ்வாறு பல்வேறு காரத்திற்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணிக்கும் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் கன்னியாகுமரியில் இருந்து வாரம் ஒருமுறை மட்டும் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (126664) இரயிலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதுள்ளது. எனவே தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக வந்தேபாரத் ஸ்லீப்பர் இரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా