கனமழை நான்கு குடிசை வீடுகள் இடிந்து சேதம்!

58பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது இதேபோன்று இன்று காலை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது

கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 63 மில்லிமீட்டர் மழையும் வைப்பார் பகுதியில் 50 மில்லிமீட்டர் மழையும் திருச்செந்தூரில் 44 மில்லி மீட்டர் மழையும் ஓட்டப்பிடாரத்தில் 40 மில்லிமீட்டர் மழையும் வேட நத்தத்தில் 38 மில்லி மீட்டர் மலையும் தூத்துக்குடியில் 27 மில்லிமீட்டர்மழையும் பதிவாகியுள்ளது மாவட்டம் முழுவதும் சுமார் 503. 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது சராசரியாக 26. 49. மீட்டர் மழை பதிவாகியுள்ளது

இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு குடிசை வீடுகள் இடிந்து சேதம் ஆகி உள்ளது

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் இந்த மழை காரணமாக குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி