மகளிர் தினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டும்; மனித சங்கிலி

60பார்த்தது
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது இதை முன்னிட்டு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ‌

இதில் தமிழக அரசு சர்வதேச மகளிர் தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு சுகாதார வசதி மற்றும் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு அலுவலகங்களில் மகளிருக்கு தனியாக ஓய்வு அறை அமைக்கப்பட வேண்டும் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பாலியல் புகார்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும் அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் காலில் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடைபெற்றது இதில் ஏராளமான அரசு துறையில் பணிபுரியும் மகளிர் கோரிக்கை பதாகைகளை அணிந்தபடி கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி