மார்ச் 30 முதல் 'ஸ்பைஸ் ஜெட்' துாத்துக்குடி - சென்னை சேவை

85பார்த்தது
துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் நான்கு முறையும், பெங்களூருவுக்கு ஒரு முறையும் தனியார் நிறுவனமான, 'இண்டிகோ' விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் விமான போக்குவரத்து சேவையை, 2021ல் அந்நிறுவனம் நிறுத்தியது.

தற்போது, பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் வரும், 30ம் தேதி முதல் துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரு முறையும், பெங்களூருவுக்கு ஒரு முறையும் விமானத்தை இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு தினமும் காலை, 6: 00 மணிக்கும், மதியம், 2: 20 மணிக்கும், துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மதியம், 12: 10 மணி, மாலை, 4: 55 மணிக்கும் விமானம் இயக்கப்பட உள்ளது.

துாத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் காலை, 8: 00 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானம் அங்கிருந்து, 9: 55 மணிக்கு திரும்ப வரும் என கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி