11ஆம் வகுப்பு மாணவனுக்கு அருவாள் வெட்டு; போலீசார் விசாரணை

78பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான சிறுவன் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று பள்ளிக்குச் செல்வதற்காக ஊரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் வந்து கொண்டிருந்தார்.
அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து பேருந்துக்குள் ஏறி உள்ளது.
அந்த கும்பல் பேருந்தில் இருந்த தேவேந்திரனை இழுத்து பேருந்துக்கு கீழே போட்டுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை சரமாரியாக அந்த மர்மகும்பல் வெட்டியுள்ளது. இதில் மாணவன் தலையில் பல வெட்டுகள் விழுந்துள்ளது.
பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து பேருந்தில் வந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி