திருவைகுண்டம் - Srivaikuntam

சாத்தான்குளம்: வாலிபரை தாக்கியதாக உறவினர்கள் 3 பேர் கைது

சாத்தான்குளம்: வாலிபரை தாக்கியதாக உறவினர்கள் 3 பேர் கைது

சாத்தான்குளம் அருகே மதுகுடிப்பதை கண்டித்து வாலிபரை தாக்கிய அவரது உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் மாயாண்டி (23). சவுண்ட் சர்வீஸ் கடை ஊழியர். இவருக்கு மதுபழக்கம் காரணமாக ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்தாராம்.  இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாயாண்டியிடம், அவரது சித்தப்பா உறவுமுறையான அதே பகுதியை சேர்ந்த தளவாய்மணி (39), வீரமணி (40), ரமேஷ் (35) ஆகியோர் நீ குடிப்பதால் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. எனவே குடிப்பழக்கத்தை கைவிடு என்று அறிவுரை கூறினார்களாம். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தளவாய்மணி உள்ளிட்ட 3 பேரும் மாயாண்டியை அவதூறாக பேசி தாக்கினர்.  இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட தளவாய்மணி, வீரமணி, ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా