சிப்காட் அமைக்க விளைநிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

52பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் மேலக்கரந்தை கீழக்கரந்தை ஆகிய பகுதிகளில் சுமார் 2500 விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிட்டு விவசாய நிலங்கள் இல்லாத தரிசு நிலப் பகுதியில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான தனியார் காற்றாலை நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன இந்த நிறுவனங்கள் விவசாய நீர்வழிப்பாதைகள் மற்றும் நீர் நிலைகளை சேதப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு காற்றாலை நிறுவனங்களிடமிருந்து சமூக பாதுகாப்பு நிதியை பெற்று சேதமான நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி