தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே கிளாக்குளம் - தாதன்குளம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை போடப்பட்டது. இந்த நிலையில் புதிதாக போடப்பட்ட சாலையில் இன்று லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென தரம் இல்லாமல் இருந்த அந்த சாலையில் லாரி வந்ததால் லாரி தார் சாலைக்குள் புதைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.