சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த தேவ திரவியம் மகன் மைக்கேல் (40). கொலை முயற்சி வழக்கில் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் உத்தரவிட்டார். அதன்படி, மைக்கேலை சாத்தான்குளம் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.