திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

திருவிடைமருதூர்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி

திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசுகையில்: - திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பழவாறு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மழை நீர் வடிய ஏதுவாக இருந்து வருகிறது.  மழைக்காலங்களில் இந்த பழவாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் விதத்தில் வரும் காலங்களில் ஆற்றின் இரு கரைகளையும் வலுப்படுத்தி முழுமையாக தூர்வாரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள உடைப்பு மற்றும் தண்ணீர் கசிவு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த பொதுப்பணித்துறை மூலமாகவும் மாவட்ட நிர்வாகம் மூலமாகவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அதீத கனமழை காரணமாக பழவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதில் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்களை இரண்டு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது எனவும், தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை 348 இடங்களில் சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது எனவும், மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கவும் பாதுகாத்திடவும் தஞ்சை மாவட்டம் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా