தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உ.பி, ம.பி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் அலைகள் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.