திருவிடைமருதூர்: கிணற்றில் கார்த்திகை அமாவாசையில் புனித நீராடி வழிபாடு

77பார்த்தது
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகில் உள்ள திருவிசநல்லூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதரய்யாவாள் வாழ்ந்துள்ளார். அவர் கார்த்திகை மாதம் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு முன் பசியுடன் வந்த ஒருவருக்கு உணவளித்ததால் சம்பிரதாயங்களை மீறியதாக கூறப்பட்டு, பரிகாரமாக கங்கையில் நீராட வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். ஸ்ரீதரய்யாவாள் தனது வீட்டு கிணற்று முன் கங்காஷ்டகஸ்தோத்திரங்களை பாடி இறைவனை மனமுருகி வேண்டியதால் கங்கை நீர் கிணற்றில் பொங்கியதாக ஐதீகம் உள்ளது. 

ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசையில் இங்கு உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கி வரும் நிகழ்வு நடக்கும். அந்த வகையில் இன்று (டிசம்பர் 1) அதிகாலை ஸ்ரீதரய்யாவாள் மடத்தில் உள்ள புனித நீர் கிணற்றுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கிணற்றில் பொங்கி வரும் கங்கை நீரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் வரிசையில் நின்று புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி